வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம், 6ஆம் ஓழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டிற்குள் இன்று அதிகாலை நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று புகுந்துள்ளது.
இதன்போது அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது கம்பியினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டில் இருந்த கைத்தொலைபேசிகள், பேர்ஸ், மோட்டர்சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம், சிசிடிவி காணொளி சேமிப்பு பெட்டகம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.
இதேவேளை வீட்டில் இருந்த தொலைக்காட்சி, சிசிடிவி கமரா என்பவற்றையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்னளனர்.
இதனையடுத்து தாக்குதலில் காயமடைந்த வைத்தியர்களான கணவனும், மனைவியும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.