பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி நிக்கோலாஸ் சார்க்கோசிக்கு எதிரான முறைகேடு வழக்கில் நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மொனாக்கோவில் வேலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் ஒரு முக்கிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி நிக்கோலாஸ் சார்க்கோசி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார்.
2012 ல் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறியதில் இருந்து பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் 66 வயதான நிக்கோலாஸ் சார்க்கோசிக்கு அரசு தரப்பு சட்டத்தரணிகள் சிறைத்தண்டனையை கோருகின்றனர்.
மட்டுமின்றி நீதிபதி Gilbert Azibert அதிக ஊதியத்துடன் சட்ட உதவியளிக்கும் பொறுப்புக்கு வர காரணமான அனைத்து அம்சங்களையும் இன்னொரு விசாரணையில் வெளிக்கொண்டுவரப்படும் எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சட்டத்துக்கு புறம்பாக கடுகளவு கூட தவறிழைக்கவில்லை என முன்னால் ஜனாதிபதி நிக்கோலாஸ் சார்க்கோசி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
நிக்கோலாஸ் சார்க்கோசி மீதான முறைகேடு வழக்கு நிரூபணமானால், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 1 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.