பிரான்சில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பான கேள்விக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதில் அளித்துள்ளார்.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சிலும் பரவி வருகிறது.
இதனால் அதைக் கட்டுப்படுத்தும் பிரான்ஸ் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பது குறித்து, Stains நகரில் உள்ள பயிற்சி பாடசாலை ஒன்றுக்கு வந்திருந்த ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், இன்னும் இது நான்கு அல்லது ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று பதில் அளித்தார். இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த பதில் பலருக்கும் ஏமாற்றமாக உள்ளதாக கூறப்படுகிறது.