பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 16 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சுமார் ஒரு வாரம் சுவிட்ஸர்லாந்தில் தங்கியிருப்பார். இதன்போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவிட்ஸர்லாந்திற்கான விஜயத்தின் போது பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
அத்துடன் இதன்போது அரச தலைவர்களை சந்தித்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கலந்துரையாடவுள்ளது. மேலும் இரு நாடுகளின் நட்புறவினை வளர்ப்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.