இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நடைபெறாது என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ முதலில் திட்டமிட்டது.
ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ், ட்விட்டரில் கூறியதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் ஹைதராபாத்தில் தான் குறைந்தளவு கொரோனா நோயாளிகள் உள்ளார்கள்.
ஐபிஎல் ஆட்டங்களை நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.
இதையடுத்து ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் ஆட்டங்களை மும்பையில் நடத்துவதில்லை என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் இடங்கள் தொடர்பில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
என்ன காரணங்களுக்காக மொஹலி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்தவில்லை என்று பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பியுள்ளன.