கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு யூடியூபில் ஒளிபரப்பாக உள்ளது.
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த கோர சம்பவத்தில் ரேணுகா அமரசிங்கா என்ற இலங்கைப்பெண் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, Minassian மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தன் மீதான கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை இதுவரை Minassian ஒப்புக்கொள்ளவில்லை.
தனக்கு மன நல பிரச்சினை ஒன்று உள்ளதால், குற்றங்களுக்கு தான் பொறுப்பல்ல, தனது பிரச்சினைதான் காரணம் என்றே வாதாடிவந்தார் Minassian.
இந்நிலையில், நீண்ட நாட்களாக நடந்துவந்த அந்த வழக்கின் தீர்ப்பு, நாளை யூடியூபில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அந்த ஒளிபரப்பு என்றும் ஒரு தகவல் கூறுகிறது.