பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தை அறிவித்த நிலையில் அதன் அடிப்படையில் எந்தெந்த திகதியில் என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பது குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாடுகள் நான்கு கட்டங்களாக தளர்த்தப்படவுள்ளது, விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகள் தரவுகளை ஆய்வு செய்ய ஒவ்வொரு கட்டங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஐந்து வாரங்கள் இடைவெளி இருக்குமாம்.
எனினும், நிலைமை மோசமைடந்துள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திகதி மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 8ம் திகதி முதற்கட்டமாக, நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கும். பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களை ஒருவர் சந்திக்க அனுமதியளிக்கப்படும்.
வெளிப்புறங்களில் இரண்டு பேர் சந்திக்க அனுமதி. ஆனால் அவர்களால் டென்னிஸ் அல்லது கோல்ப் விளையாட முடியாது.
மார்ச் 29ம் திகதி, வெளிப்புறங்களில் 6 பேர் வரை சந்திக்க அனுமதிக்கும் Rule of six விதி மீண்டும் அமுலுக்கு வரும் மற்றும் வீட்டிலேயே இருக்மாறு மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு முடிவுக்கு வரும். ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கப்படும்.
ஏப்ரல் 12ம் திகதி இரண்டாம் கட்டமாக, சிகையலங்காரம் மற்றும் அழகு நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், தீம் பார்க்கள் மற்றும் ஜிம்கள் போன்ற அத்தியாவசிய சில்லறை விற்பனை கடைகள் திறக்கலாம்.
பப்கள் மற்றும் உணவகங்கள் outdoor dining-ஐ தொடங்கலாம் மற்றும் தங்குமிடங்களில் self catering மீண்டும் தொடங்கலாம்.
மே 17ம் திகதி 3வது கட்டமாக, 30 பேருடன் பெரும்பாலான வெளிப்புற கூட்டங்கள் மீண்டும் நடத்தலாம் மற்றும் உட்புற உணவு மற்றும் drinking மீண்டும் தொடங்கலாம்.
வரம்புகள் மற்றும் சோதனைகளுடன் வெளிப்புற நிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் திறக்கலாம். 30 நபர்களுடன் திருமணங்கள், திருமண வரவேற்புகள், wakes, இறுதி சடங்குகள் மற்றும் christenings அனுமதிக்கப்படும்.
ஜூன் 21ம் திகதி 4வது கட்டமாக, சமூக தொடர்புக்கான அனைத்து சட்ட வரம்புகளும் நீக்கப்படும். இரவு விடுதிகளை மீண்டும் திறக்கவும், திருவிழாக்கள் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திருமணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.