பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரான்ஸ் அதிகாரிகள் உண்மையை மூடி மறைக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர்.
பிரான்சில் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தது, ஒரு பிரித்தானிய ஈராக்கிய குடும்பம்.
சுற்றுலா சென்றிருந்த பொறியாளரான Saad al-Hilli, அவரது மனைவி Iqbal மற்றும் அவரது தாய், Saad al-Hilliயின் 7 வயது மகள் Zainab, ஆகியோரை மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
அதில் Saad al-Hilli, அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அப்போது அவ்வழியே சைக்கிளில் வந்த பிரான்ஸ் நாட்டவரான ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் 2012இல் நடந்த நிலையில், வழக்கில் ஆதாரம் எதுவுமே சிக்கவில்லை. பின்னர் பாரீஸிலுள்ள லாட்ஜ் ஒன்றில் நடத்தப்பட்ட ரெய்டு ஒன்றில், முன்னாள் பொலிசார் மற்றும் இராணுவ அதிகாரிகள் கொண்ட கிரிமினல் கேங் ஒன்று சிக்கியுள்ளது.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், பிரான்சில் நடந்த கொலை சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட அதே வகை துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு கோடையில், பாரீஸ் புறநகர் பகுதியில் வாழும் Marie-Hélène Dini (55) என்ற மனோவியல் சிகிச்சை நிபுணரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்தபோது பொலிசாரிடம் சிக்கியது.
அவர்களிடமும் இதே வகை குண்டுகள் சிக்கின. அதே கிரிமினல் கேங்தான் இப்போது Saad al-Hilli குடும்பத்தையும் கொலை செய்திருக்கலாம் என முதலில் பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.
அதேபோல், கொல்லப்பட்ட Saad al-Hilliயின் சகோதரரான Zaid, இந்த சம்பவம் உண்மையில் அன்று சைக்கிள் ஓட்டி வந்த Sylvain Mollier (45) என்பவரை கொல்ல நடந்த முயற்சியாக இருக்கலாம் என்றும், அதில் தவறுதலாக தனது சகோதரரின் குடும்பம் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறிவந்தார்.
ஆனால், தற்போது இந்த கூற்றுக்களை பிரெஞ்சு பொலிசார் நிராகரித்துள்ளார்கள். ஆகவே, அவர்கள் உண்மையை மூடி மறைக்க முயல்கிறார்கள் என பிரெஞ்சு பொலிசார் மீது குற்றம் சாட்டியுள்ளார் Zaid.
அத்துடன், இந்த வழக்கை கையில் எடுக்குமாறு அவர் பிரித்தானிய பொலிசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.