அஸ்ட்ராஜெனெகாவின் COVID-19 தடுப்பூசியை 100 மில்லியன் டோஸ் பிரித்தானியா ஆர்டர் செய்துள்ளது.
அதில் 10 மில்லியன் டோஸ் Serum Institute of India-விலிருந்து வரும் என்று பிரித்தானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான Serum Institute of India, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறது.
இந்தியாவின் Serum Institute of India, பங்களாதேஷ் முதல் பிரேசில் வரையிலான குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை COVISHIELD என்றார் அப்பெயரில் வழங்கிவருகிறது.
அதேபோல், இந்தியா உலக சுகாதார அமைப்பு மற்றும் GAVI தடுப்பூசி கூட்டணியின் ஆதரவுடன் Covax திட்டத்திற்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
ஆனால் மேற்கத்திய நாடுகளிலிருந்து தேவை அதிகரித்துள்ள நிலையில், இப்போது 10 மில்லியன் டோஸ்களை பிரித்தானியாவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
பிரித்தானியாவுக்கு தடுப்பூசி வழங்குவதால், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படாதவாறு SII-உடன் ஒப்பந்தத்தை பின்பற்றுவைத்தாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.