உணவுகளை சாப்பிட்டவுடன் சில விடயங்களை மேற்கொள்ளக்கூடாது.
அப்படி செய்வதால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றர்.
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விடயங்கள்
தூங்குவது
உணவு உட்கொண்ட பின்னர் உடனடியாக தூங்கவே கூடாது. பொதுவாக செரிமானப் பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்குச் செல்லும்.
இந்த சமயத்தில் தூங்கினால் குடல்வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இப்பழக்கத்தை தொடர்ந்தால் நெஞ்செரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
குளிக்கக்கூடாது
பொதுவாகவே சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என முன்னோர்கள் கூறுவார்கள்.
இதற்கு பின்னால் முக்கிய காரணம் உள்ளது. அதாவது, சாப்பிட்டவுடனேயே செரிமானப் பணிகள் உடலில் தொடங்கிவிடும். குளியலின்போது, உடல் உஷ்ணமும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். குறிப்பாக, உடலின் மேற்புறத்தில் சுறுசுறுப்பான ரத்த ஓட்டம் இருக்கும்.
அந்த வகையில், வயிற்றுப் பகுதியிலுள்ள ரத்தம் மற்ற பகுதிகளை நோக்கி வேகமாகச் செல்லும்போது, செரிமானப் பணிகள் பாதிக்கும்
புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பது கேடு தரும்! அதிலும் சாப்பிட்டவுடன் புகைப்பிடித்தால் கெடுதல் அதிகம். சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட்டுக்குச் சமம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கடுமையான வேலைகள்
சாப்பிட்டவுடன் கடுமையான வேலை, கடும் உடற்பயிற்சி செய்தால் செரிமானத்துக்குத் தேவையான சக்தி கிடைக்காது, செரிமானமாகும் சிறு உணவும் உடல் முழுக்கப் போய் சேராமல் தடுக்கப்பட்டுவிடும். உணவிலிருந்து கிடைக்கும் அனைத்துச் சக்தியும் வெகு எளிதாகக் குறைந்துவிடக்கூடும்.