ஒவ்வொரு காலத்திலும் சந்தையில் பல வகையான பழங்கள் வந்த வண்ணம் இருக்கும். அப்படி தற்போது நாம் பார்ப்பது தான் சீத்தாப்பழம். இதில் சிறப்பு என்னவென்றால் இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
சீத்தாப்பழம் பல அபூர்வ சத்துக்களையும் மருத்துவக் குணங்களையும் கொண்டது. சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப்பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சதைப் பற்றுள்ள இந்தப்பழம் அனைத்து இடங்களிலும் கிடைகும். இந்தப்பழத்தின் சிறப்பு என்னவென்றால் இது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
எளிதாக கிடைக்கூடிய சீத்தாபழம் அற்புதமான மருந்தாகி பலன் தருகிறது. இதனுடைய இலை, விதைகள் மருந்தாக பயன்படுகிறது. இது பேதியை நிறுத்தக் கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்ட சீத்தாபழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகிறது. கிருமி நாசினியாக விளங்குகிறது.
ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சீத்தாபழம் ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன.
மன அழுத்தத்தை சரிப்படுத்த
இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை.
புண்கள் சீழ் பிடிக்காமல் இருக்க
சீத்தா மரத்தின் இலைகள், தேங்காய் எண்ணெய். சீத்தா மரத்தின் இலைகளை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் சீதா இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி மேல்பூச்சாக போடும்போது புண்கள் சீழ் பிடிக்காமல் ஆறும். கிருமிகள் தொற்றாத வண்ணம் தடுக்கிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி
சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
நரம்புகள் வலுப்பெற
சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
பேன்கள் ஒழிந்து போக
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
காய்ச்சல் குணமாக
சீத்தாப்பழ இலைகளை உலரவைத்து இதை பொடியாக செய்து வைத்துக்கொண்டு. இந்த பொடி 1 டீஸ்பூன் 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து டீ போன்று குடித்து வர பல நாட்களாக உள்ள காய்ச்சல் குணமாகும்.
நினைவாற்றல் அதிகரிக்க
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சிறுநீர் கடுப்பு நீங்க
திராட்சை பழ சாற்றுடன் சீத்தாப்பழத்தை கலந்து சாப்பிடும் பொழுது உடல் வலிமை பெறும், எலுமிச்சை சாறுடன் இப்பழத்தை கலந்து குடித்து வரும் பொழுது சிறுநீர் கடுப்பு நீங்கி குணம் அடையலாம்.