ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்களை மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகர் வருன் தவானை நியமித்து உள்ளது.
இந்த மாடலில் ஏஐ ஹைலைட் போர்டிரெயிட் வீடியோ அம்சம் கொண்டுள்ளது. இது குறைந்த வெளிச்சம் கொண்ட வீடியோ எடுக்கப்படும் போதும் சீரான காட்சிகளை வெளிப்படுத்தும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.
அதுமட்டுமின்றி இது 5ஜி 3.0 வசதி கொண்ட முதல் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை பெற வழி செய்கிறது.
மேலும் இதில் எட்டு ஆன்டெனாக்கள் 360 கோணங்களில் பொருத்தப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் எந்த நிலையில் இருந்தாலும் சீரான 4ஜி மற்றும் 5ஜி டேட்டா அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.