மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் காணொலி காட்சி வழியாக இன்று நடக்கிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. விரைவுப்படுத்தியுள்ளது. மேலும் விருப்பமனு கொடுத்த தொண்டர்களிடம் நேர்காணலையும் தி.மு.க. நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரம் இன்மையால் இந்த கூட்டத்தை காணொலி காட்சி வழியாக தி.மு.க. நடத்துகிறது. கூட்டம் காலை 9 மணி அளவில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
இந்த கூட்டத்தில் திருச்சியில் 7-ந்தேதி நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் பிரசார வியூகம், வேட்பாளர் தேர்வு, பிரசார அணி அமைப்பது, தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மாவட்ட அளவில் தி.மு.க.விற்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் பேச இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்..!!
Loading...
Loading...
Loading...