பொதுவாக சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும்.
இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் இது தற்காலிகமாக தான் உதவி புரியும்.
அந்தவகையில் இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- தயிர்
- அரிசி மாவு
- கடலை மாவு
- மஞ்சள் தூள்
- எலுமிச்சை சாறு
செய்முறை
முதலில் தயிருடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து விடவும்.
அதன் பின்னர் எலுமிச்சை சாறுடன் விட்டு கலந்து வாய்ப்பகுதியை சுற்றி தடவவும்.
பின் 15 நிமிடங்கள் வைத்து நன்றாக மசாஜ் செய்து கழுவி விட வேண்டும்.
இந்த கலவையை வாரம் 1 அல்லது 2 முறைகள் செய்து வந்தால் வாய்ப்பகுதியை சுற்றி இருக்கும் கருமை மறைந்து பொலிவு பெறும்.