Loading...
தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் ஹிட்டடித்த படம் ‘பெல்லி சூப்புலு’. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கவுதம் மேனன் கைப்பற்றியிருக்கிறார்.
இந்நிலையில் பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா நடிப்பது உறுதியாகியுள்ளது. ‘ராஜதந்திரம்’ தயாரிப்பாளர் செந்தில் வீராசாமி இப்படத்தை இயக்க, கவுதம் மேனன் தனது ஒன்றாக எண்டெயின்மெண்ட் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
Loading...
தற்போது இப்படத்தின் நாயகன் மற்றும் தொழிநுட்பக் குழுவினரை தேர்வு செய்யும் பணியில் படக்குழு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமன்னா தற்போது ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ‘குயின்’ இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
Loading...