தமிழகத்தில் 16 வயது சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்தவர் விஜயகுமார் (24). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் 2-வது திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி விஜயகுமார் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதன் பின்னர் சிறுமி கர்ப்பமானது மருத்துவ பரிசோதனையில் தெரிந்தது.
இதையறித்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் பொலிசில் புகார் செய்தனர்.
புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட விஜயகுமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இவ்வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கபப்ட்டுள்ளது.
அதில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய விஜயகுமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.