பிரித்தானியர்கள் தகுந்த காரணம் இன்றி வெளிநாடு செல்ல முடியாது எனவும். வரும் திங்கட் கிழமை முதல் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டி இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியர்கள் வெளிநாடு சென்றுவிட்டு, மீண்டும் நாட்டுக்கு உள்ளே வரும் வேளை, 3 பக்கங்கள் அடங்கிய படிவம் ஒன்றை நிரப்பி எடுத்துவரவேண்டும். அதில் அவர்கள் ஏன் வெளிநாடு சென்றார்கள் என்று சரியான காரணத்தை காட்டி அத்தாட்சிப் படுத்தி இருக்கவேண்டும்.
இல்லையென்றால் 200 பவுண்டுகளை தண்டமாக கட்டி வேண்டி இருக்கும். மேலும் படிவத்தில் ஏதாவது பொய் கூறப்பட்டு இருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற சட்டத்தை பிரித்தானிய அரசு சற்று முன்னர் போட்டுள்ளது. இந்த சட்டம், மே மாதம் 17ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும். மே 17ம் திகதிக்கு பின்னரே தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை மக்கள் மேற்கொள்ள முடியும் என்றும் பிரித்தானிய அரசு தற்போது தெரிவித்துள்ளது. Surce Gov: Britons with good reasons to go abroad face £200 FINES if they arrive at airport without a new permit from Monday – and could be ARRESTED if they lie on the form – under new plans.
உருமாறிய பிரேசில் வைரஸ், அதன் பின்னர் உருமாறிய ஆபிரிக்க வைரஸ், என்று சுமார் 9 வகையான கொரோனா வைரஸ் உள்ள நிலையில். தற்போது பிரித்தானியாவில் 11 பேருக்கு பிரேசில் வைரஸ் இருப்பதும் மேலும் 6 பேருக்கு என்ன என்று கண்டு பிடிக்கப் படாத ஒரு உரு மாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே இந்த கடுமையான சட்டத்தை பிரித்தானிய அரசு கொண்டுவந்துள்ளது.