வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும் பொலனறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 50 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமைகளை தோன்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.