சுவிஸில் அனைத்து குடிமக்களும் விரைவில் மாதத்திற்கு ஐந்து இலவச சுய பரிசோதனைகளைப் பெற வேண்டும் என பெடரல் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
அனைத்து குடிமக்களுக்குமான இலவச பரிசோதனை திட்டத்தை எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அடுத்த ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் மார்ச் 22 அன்று முன்னெடுக்கப்படும் எனவும்,
இது தொடர்பாக பெடரல் கவுன்சில் மார்ச் 19 அன்று இறுதி முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, கொரோனா அறிகுறிகள் இல்லாமல் சோதிக்க விரும்பும் நபர்களுக்கும், மார்ச் 15 முதல் சோதனைகளுக்கான அனைத்து செலவுகளையும் பெடரல் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பெடரல் கவுன்சில் முன்மொழிந்துள்ளது.
மேலும், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில், உமிழ்நீர் மாதிரிகளைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பெடரல் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இதுவரை சுய பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும், உடனடியாக மாதம் ஐந்து இலவச சுய பரிசோதனைகளை மேற்கொள்ள உரிய அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மட்டுமின்றி சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் எனவும், மாஸ்க் கட்டாயம் எனவும் பெடர்ல் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.