ஊரடங்கு சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமான மீராமிதுன் அதன்பிறகு இருந்த இடமே தெரியாத அளவுக்கு அமைதியாக இருந்தார். அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் ஏதாவது கருத்து வெளியிட்டாலும் ரசிகர்கள் கண்டமேனிக்கு திட்டியதால் ஓட்டம் பிடித்து விட்டார்.
அப்பாடா, இனிமேலாவது நிம்மதியாக இருப்போம் என நம்பியிருந்த ரசிகர்களை மீண்டும் வெறுப்பேற்றும் விதமாக ஆல்பம் பாடல் ஒன்றின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மீரா மிதுன்.
இது ஆல்பம் பாடலா அல்லது ஆபாச பாடலா எனும் அளவுக்கு படு கேவலமாக உள்ளது. அந்த பாடலில் தன்னுடைய உடல் அங்கங்களை காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் மீரா மிதுன். அவருடைய எண்ணமும் அதுவாகத்தான் இருந்திருக்கும்.
வீடியோவில் அவர் ஆடும் நடனத்தை விட அந்தப் பாடலில் வரும் வரிகள் இன்னும் மோசம். இரட்டை அர்த்த வசனங்களின் குரு வெண்ணிற ஆடை மூர்த்தியையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போல அந்த பாடலாசிரியர்.
கானா பாடல் போல் உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் வெறும் உள்ளாடைகளுடன் மீராமிதுன் நடனமாடியுள்ளது சென்சார் போர்டே மிரண்டு போகும் அளவுக்கு கவர்ச்சியில் கண்டம் பண்ணியுள்ளார்.
எவ்வளவு முக்கினாலும் நடக்காது என்பது போல என்னதான் உடலைக் காட்டி ஆட்டம் போட்டாலும் சினிமாவில் வாய்ப்பு இல்லை என்பது மட்டும் உறுதி. யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறாங்க என்கிறார்கள் ரசிகர்கள்.