Loading...
கோலாலம்பூர், மார்ச் 6 – அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சியுடனான ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வது என அம்னோ எடுத்த முடிவில் எந்தவொரு வெளிதரப்பினருக்கும் தொடர்பில்லை. கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்னோவின் துணைத்தலைவர் முகமட் ஹசான் கூறினார்.
Loading...
அம்னோ முதிர்ச்சியான கட்சி. எனவே, தேர்தலின்போது பெர்சத்துவுடன் ஒட்டும், உறவும் வைத்துக்கொள்ளமாட்டோம். ஒருவர் அல்லது இருவர் இந்த முடிவை எடுக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட அம்னோ டிவிசன்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. எனவே இந்த விவகாரத்தில் வெளித்தரப்பினர் சம்பந்தப்பட்டதாக கூறுவதில் அர்த்தமில்லையென முகமட் ஹசான் தெரிவித்தார்.
Loading...