பேசல்ஸ், மார்ச் 7- சுவிஸ்லாந்து பொது பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் P.V. Sindhu மகளிர் ஒற்றையர் பிரிவிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Kidampi Srikanth மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் SatwiK Sairaj – Chirag Shetty ஜோடி இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
P.V. Sindhu 21 -16 21-23 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் Busanan Ongbamrungphanனை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Kidampi Srikanth தாய்லாந்தின் Kanthapon Wangcharoen னை 21-9 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் Chatwik Sairaj – Chirag Shetty ஜோடி மலேசியாவின் Ong Yew Sin – Teo Ee yi ஜோடியை 12 -21 21-19 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.