வாஷிங்டன், மார்ச் 6 – நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவருவதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டுவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் தமது பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற டாக்டர் சுவாதி மோகன், எனது துணையதிபர் கமலா ஹரிஸ், எனது உரையை எழுதித்தரும் வினய் ரெட்டி (Vinay Reddy) ஆகியோர் உட்பட அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பாக செயல்படுவதாக ஜோ பைடன் புகழாரம் சூட்டினார்.
நாசா விஞ்ஞானிகளுடன் காணொளி மூலமாக நடைபெற்ற உரையாடலில் கலந்துகொண்டபோது அவர் இதனை தெரிவித்தார். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றது முதல் தனது நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களில் 55 பேரை முக்கிய பொறுப்புக்களுக்கு ஜோ பைடன் நியமித்துள்ளார்.