Loading...
கங்கார், மார்ச் 6 – கோவிட் -19 க்கு எதிரான அனைத்து வகையான தடுப்பூசிகளும் சிறந்தவைதான். எனவே, எந்தவகையான தடுப்பூசி சிறந்த்து என்பது குறித்து கவலைகொள்ளாமல் அதனை போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading...
கோவிட்டிற்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பரிசோதிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் குறித்து NPRA எனப்படும் தேசிய மருந்தியல் கட்டுப்பாட்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தேசிய தடுப்பூசி திட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டால் அவை ஆக்கப்பூர்வமான பயனைத் தரும் என முஹிடின் கூறினார்.
Loading...