Loading...
சென்னை, மார்ச் 6 – அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக தேர்தலில் அ.தி.மு.கவுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிக்குமிடையே தொகுதி பங்கீடு குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க தரப்ப்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பா.ஜ.கவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தனர்.
Loading...
அதோடு சட்டமன்ற தேர்தலோடு தமிழகத்தில் நடைபெறவிருக்கும் கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடுவதற்கும் அ.தி.மு.க இணக்கம் தெரிவித்துள்ளது.
Loading...