நியுயார்க், மார்ச் 6 – போயிங் 777 விமானத்தின் இயந்திரத்தில் கடந்த மாதம் தீ பிடித்த்தற்கான காரணம் குறித்து அமெரிக்கா பாதுகாப்பு விதிமுறைக்கான முக்கிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் தீ பிடித்ததைத் தொடர்ந்து அதன் உடைந்த பாகங்களில் சில வீடுகள் இருக்கும் பகுதியில் விழுந்தன. எனினும் அந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து இன்னும் இறுதி முடிவுக்கு தாங்கள் வரவில்லையென தேசிய விமான போக்குவரத்துத்துறையின் பாதுகாப்புக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ஹவாய்க்கு புறப்பட்ட United Airlines-சின் போயிங் 777 விமானத்தின் இயந்திரம் தீப்பற்றியதைத் தொடர்ந்து அவசரமாக அந்த விமானம் Denver ரில் தரையிறங்கியது. அந்த விமானத்தின் இயந்திரத்திலுள்ள விசிறியின் கத்தி உடைந்தததால் அதன் இயந்திரம் தீப்பிடித்தற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.