பெட்டாலிங் ஜெயா, மார்ச்.6 – டாமான்சாரா சாலையின் நடுவே, சண்டையிட்டுக் கொண்ட இரு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மோட்டார் ஓட்டி ஒருவர் காரின் ஸ்டீயரிங் (stereng)-யை லாக் செய்யும் இரும்பைக் கொண்டு டாக்சி ஓட்டுனரை பலமுறை தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சம்பந்தப்பட்ட டாக்சி ஓட்டுனர் காரை முறுக்கியதற்காக அவரை மோட்டார் வண்டி ஓட்டுனர் கடிந்துள்ளார். அதை தாங்க முடியாது ஆத்திரமடைந்த அந்த டாக்சி ஓட்டுனர் காரிலிருந்து காரின் ஸ்டீயரிங் (stereng)-யை லாக் செய்யும் இரும்பை வெளியில் எடுத்து அந்த மோட்டார் வண்டி ஓட்டுனரை தாக்க முயன்றார்.
அப்போது அந்த மோட்டார் வண்டி ஓட்டுனர் அந்த இரும்பைப் பிடுங்கி டாக்சி ஓட்டுனரை தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் எசானி முகமட் பைசால் தெரிவித்தார். இதனிடையே, சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.