கோலாலம்பூர், மார்ச் 6 – புடுவிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை நேற்றிரவு மேற்கொண்ட அதிரடி பரிசோதனை நடவடிக்கையில் 205 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். நெரிச்சல்மிக்க அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பல வெளிநாட்டினர் தங்கியிருப்பதாக உள்நாட்டு மக்களிடமிருந்து புகார்கள் பெற்றதைத் தொடர்ந்து அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
92 அதிகாரிகள் , தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் 18 அமலாக்க அதிகாரிகளும் இந்த பரிசோதனை நடவடிக்கையில் பங்கேற்றதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் Hamid Adam ( ஹமிட் அடாம் ) தெரிவித்தார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 425 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் வேலை ஆவணங்கள் எதுவுமின்றி இருந்த 203 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வங்காளதேசிகள், இந்தோனேசியர்கள், மியன்மார் மற்றும் நேப்பாள பிரஜைகளும் அடங்குவர்,