முகத்தில் இதயவடிவ மச்சத்துடன் பிறந்துள்ள அதிசய குழந்தையுடன் செல்ஃபி எடுக்க துருக்கி மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.
துருக்கியின் அங்காரா நகரைச் சேர்ந்த முராட் எஞ்சின் மற்றும் சீயாடா தம்பதி, தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் மட்டுமல்ல சியாடா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களும் விந்தையில் திளைத்தனர்.
காரணம் அந்த குழந்தையின் முகத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த இதய வடிவிலான மச்சம். இதய வடிவ மச்சம் சினார் என்ற பெயருடைய, தங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று அந்த தம்பதியினர் தீர்க்கமாக நம்புகின்றனர்.
இதயவடிவ மச்சத்துடன் வளர்ந்துவரும் அந்த குழந்தையுடன் செல்ஃபி எடுக்க மருத்துவமனை ஊழியர்கள் முதல் பக்கத்து வீட்டு வாண்டுகள் முதல் ஆர்வம் காட்டி வருவதை பெருமை பொங்க பார்த்து வருகிறார்கள் சினாரின் பெற்றோர்.