நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் காரணம் கண்டறியமுடியாத சிறுநீரக நோய் பரவி வருவதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் குறித்த சில இடங்களில் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் அச்செயலணி தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இக்காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயானது வவுனியா, செட்டிகுளம், மதவாச்சி, பொலநறுவை, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தின் சில இடங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.