இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளதை அடுத்து தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது.
4வது மற்றும் கடைசி டெஸ்டை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. அஸ்வின், அக்ஷர் படேல் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது.
ஆட்ட நாயகன் விருது ரிஷப் பந்துக்கும் தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது.
இது அஸ்வினின் 8-வது தொடர் நாயகன் விருதாகும். இந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளும் ஒரு சதத்துடன் மொத்தம் 189 ஓட்டங்களும் எடுத்துள்ளார் அஸ்வின். இதன்மூலம் தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்றவர்களின் பட்டியலில் அஸ்வின் இணைந்துள்ளார்.
அடிகமுறை தொடர் நாயகன் விருது பெற்றவர் இலங்கையின் சுழல் மன்னன் முரளிதரன். அவர் 11 முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.