சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் மற்றும் அதிக உயிரிழப்புகளால் இன்னொரு நன்மையும் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு பட்டியலிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், இரண்டாவது கொரோனா அலை காரணமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவானது.
இந்த காலகட்டத்தில், புள்ளிவிவர ரீதியாக எதிர்பார்க்கப்பட்டதை விட 8,400 பேர் இறந்துள்ளனர்.
இருப்பினும், ஒப்பீட்டு ஆண்டுகளை விட பிப்ரவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட வயதினரிடையே குறைவான எண்ணிக்கையிலான மக்கள் இறந்துவிட்டதாக பெடரல் புள்ளிவிவர வல்லுநர்களிடமிருந்து வெளிவந்த தரவு காட்டுகிறது.
வைரஸ் பரவுவதைத் தடுக்க பெடரல் கவுன்சில் முன்னெடுத்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் காரணமாக இது நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி பேண கேட்டுக்கொள்ளப்பட்டதால் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் பலர் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுவாச மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களால் இந்த ஆண்டு குறைவான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் குழந்தை மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.