அடைக்கலம் தேடி எல்லை தாண்டிய பல காவல்துறை அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு அண்டை நாடான இந்தியாவிடம் மியான்மர் கோரிக்கை வைத்துள்ளது.
மியான்மர் ராணுவத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்ததையடுத்து நடவடிக்கைகளுக்கு பயந்து பல காவல்துறை அதிகாரிகள் அவர்களின் குடும்பத்துடன் சமீப நாட்களில் இந்திய எல்லையை கடந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள மியான்மர் நிர்வாகம்,
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு உறவுகளை நிலைநிறுத்துவதற்காக எல்லை தாண்டியுள்ள காவல்துறை அதிகாரிகள் திருப்பி வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் நடந்த இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மியான்மர் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் தடுமாறி வருகிறது.
மேலும், ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர், இதில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தை எதிர்த்து, நாடு முழுவதும் திரண்டனர்.
மிகப்பெரிய நகரமான யாங்கோனில், கூட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்,