Loading...
சிங்கப்பூர், மார்ச் 8 – சிங்கப்பூரில் மூன்று பாலியல் குற்றங்களுக்கு சிறைத் தண்டனையை அதிகரிக்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போதுள்ள தண்டனைகள் போதுமானதாக இல்லையென்பதால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார்.
Loading...
மானபங்க குற்றத்திற்காக கூடிய பட்ச சிறைத்தண்டனை இரண்டு ஆண்டிலிருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு அதிகரிக்கப்படவுள்ளன. வயது குறைந்தவர்களுடான பாலியல் தொடர்புக்கான கூடிய தண்டனை ஒரு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்படுத்தி அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் குற்றங்கள் மீதான தண்டனைகள் மறுஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து உத்தேச தண்டனை மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Loading...