உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் பல நோய்கள் தாக்குகிறது.
ஆகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து பார்ப்போம்
பூண்டு
நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் உணவுகளில் சிறந்த உணவாக திகழ்வது பூண்டு. இதில் ஜின்க், சல்ஃபர், செலினியம், வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற நிறைய சத்துக்கள் இருக்கின்றன.
தயிர்
செரிமான மண்டலத்தை ஊக்குவிக்கும் ஓர் சிறந்த உணவாக திகழ்வது தயிர். அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் தவறாமல் தினமும் தயிரை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
வைட்டமின் டி
அதிக சூரிய வெளிச்சத்தில் (வெயிலில்) அலைவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதிகாலையில் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தில் இருந்து நமது உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் டி சத்து கிடைக்கிறது.
ஓட்ஸ்
ஓட்ஸ் உணவில் இருக்கும் நார்ச்சத்தும், நுண்ணுயிர்களை கொல்லும் குணமும் உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, செரிமானத்தை சீராக்க உதவுகிறது.