பிரித்தானியா கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள குற்றச்சட்டை பிரதமர் போரிஸ் ஜான்சன் நிராகரித்துள்ளார்.
பிரித்தானியா நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என உள்நாட்டு தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் Charles Michel குற்றம்சாட்டினார்.
ஆனால், அவரது கூற்றை பிரதமர் போரிஸ் ஜான்சன் நிராகரித்துள்ளார். மற்ற நாடுகளுக்கான எந்தவொரு விற்பனையையும் அரசாங்கம் “தடுக்கவில்லை” என்று கூறினார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவரின் குற்றச்சாட்டுக்கு உரையாற்றிய அவர், உலகம் முழுவதும் தடுப்பூசி விநியோகிக்க அமைக்கப்பட்ட Covax முயற்சிக்கு பிரித்தானியா 548 மில்லியன் பவுண்ட் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது என்றும் இந்த முன்னேற்றம் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.
மேலும், ‘தடுப்பூசி தேசியவாதத்தை’ அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதாகக் கூறியா ஜான்சன், இந்த தொற்றுநோயைச் சமாளிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் விருப்படுவதாக கூறினார்.