முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க, தனது மூத்த மகளின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடாத்தியுள்ளார்.
ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகளான மாயா சேனாநாயக்க மற்றும் சாலக விஜேரத்ன ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
குறித்த ஆடம்பர திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ரோசி சேனாநாயக்கவின் மகள் London College of Fashionல் நவநாகரிகம் தொடர்பிலான பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரோசி சேனாநாயக்கவின் மகள் திஸக்யா மாயா சேனாநாயக்க குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவு அவதானம் செலுத்தி வந்தது.
அண்மையில் ,2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலேயே அவதானம் செலுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.