ரஷ்யாவில் குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்ளும் வேலைக்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், அந்த குழந்தையைக் கொன்று, அதன் தலையை வெட்டி, வெட்டிய தலையுடன் சாலையில் நடமாடிய காட்சிகள் திகிலை ஏற்படுத்தின.
2016ஆம் ஆண்டு, ரஷ்யாவில் Anastasia Meshcheryakov (4) என்ற குழந்தையை கவனித்துக்கொள்ளும் பணியிலிருந்த Gyulchekhra Bobokulova (43) என்ற பெண், அந்த குழந்தையைக் கொலை செய்து, அதன் தலையைக் கையில் எடுத்துக்கொண்டு, அல்லாஹூ அக்பர் என கத்தியபடியே சாலையில் சென்றதைக் கண்ட பக்கள் திகிலடைந்தனர்.
பொலிசார் வந்தபோது, தான் ஒரு தீவிரவாதி என்றும், தன்னிடம் வெடிகுண்டு உள்ளதாகவும் மிரட்டல் விடுத்தார் Bobokulova.
ஆனாலும், பொலிசார் அவர் மீது பாய்ந்து அவரைக் கைது செய்தனர். அவரைக் கைது செய்யும்போது, தரையில் அந்த குழந்தையின் தலை உருளும் காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தன.
Bobokulovaவுக்கு மன நல பாதிப்பு என்று முடிவு செய்த நீதிமன்றம், அவரை மன நல மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது Bobokulova விடுதலை செய்யப்பட இருக்கிறார். ஆனால், அவரை விடுதலை செய்வதற்கு கொலை செய்யப்பட்ட Anastasiaவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர் Anastasiaவை கொலை செய்ததுடன், தங்கள் குடும்பம் முழுவதையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதை அவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
அந்த நேரத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிரியாவில் குண்டு வீசியதற்கு பழி வாங்கவே தான் குழந்தையைக் கொன்றதாக Bobokulova தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.