பிரான்சில் தந்தை ஒருவர் தனது கைக்குழந்தையுடன் 10-வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் Gex (Ain) நகரில் வசித்து வரும் தம்பதியினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தந்தை தனது 20 மாத கைக்குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டு, Montargis (Loiret) நகருக்கு திரும்பியுள்ளார்.
அங்கு அவர் முன்னர் வசித்து வீடு இருப்பதால், அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் தாம் வசித்த வீட்டை பார்க்க வந்ததாகவும், மொட்டை மாடிக்கு செல்ல விரும்புவதாகவும் கூறி, 10-வது தளத்திற்கு சென்றுள்ளார்.
அதன் பின் அங்கிருந்து தனது கைக்குழந்தையுடன் அவர் குதிக்க, இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதற்கு அந்த குழந்தையின் தாயார் தன்னுடைய குழந்தையை கணவர் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் தெரிவிக்க, இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.