இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை எந்த அணி வெல்லும் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கணித்துள்ளார்.
உலகையே மிரட்டி வரும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய உலகக்கோப்பை டி20 தொடர், இந்த ஆண்டு இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் இப்போதில் இருந்தே தங்கள் அணியை வலுப்படுத்தி வருகின்றன. இருப்பினும் ஒரு சில அணிகளில் இருக்கும் வீரர்கள் எந்த அணி இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளனர்.
அதன் படி இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் ஆன இயான் மோர்கன் இது குறித்து கூறுகையில், இந்த முறை இந்திய அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று நான் கருதுகிறேன்.
ஏனெனில், இந்திய அணி அசுரபலம் கொண்ட அணி, குறிப்பாக இந்த முறை டி.20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதும் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாக அமையும்.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.
இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று கூறுவதால் எனது அணியை குறைத்து மதிப்பிட்டு விட்டதாக அர்த்தம் இல்லை, வெளிநாடுகளில் எங்களின் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும்.
இன்னும் டி20 உலகக்கோப்பைக்கு 7 மாதங்கள் வரை இருப்பதால் இதை பயன்படுத்தி கொண்டு அணியில் நிறைய முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.