பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்திய கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் இறப்பு விவகாரத்தில் அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகையை வழங்கியுள்ளது மினியாபொலிஸ் நகர நிர்வாகம்.
ஜார்ஜ் ஃபிலாய்ட் இறப்பு விவகாரத்தில் அவரது குடும்பம் நகர நிர்வாகத்திற்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது இருதரப்பு ஒப்புதலுடன் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பீடாக 27 மில்லியன் டொலர் தொகையை வழங்கவும் மினியாபொலிஸ் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
46 வயதான ஜார்ஜ் ஃபிலாய்ட் கடந்த ஆண்டு பொலிஸ் விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார்.
இந்த மரணம் அமெரிக்கா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், ஆர்ப்பாட்டங்கள் பல மாகாணங்களில் கலவரமாகவும் வெடித்தது.
மட்டுமின்றி, ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம், உலகமெங்கும் கருப்பினத்தவர்களின் உயிரும் உயர்ந்தது தான் என ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமாக அமைந்தது.