கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மூன்றாவது தேசிய ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர இத்தாலி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஈஸ்டர் பண்டிகை வரை இந்த மூன்றாவது தேசிய ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, நாம் ஒரு புதிய மோசமான நிலையைக் கையாளுகிறோம் என்று இத்தாலியின் புதிய பிரதமர் மரியோ டிராகி வெள்ளிக்கிழமை ரோம்-விமான நிலையத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்றபோது தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 150,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய வார எண்ணிக்கையை விட 20.000 அதிகமாகும். இதனாலையே, கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் டிராகி தெரிவித்துள்ளார்.
அமுலுக்கு வரவிருக்கும் மூன்றாவது தேசிய ஊரடங்கால் சிறார்களின் கல்வி பாதிக்கப்படும், பொருளாதாரம் சரிவடையும் மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் நாம் பாதிப்புக்கு உள்ளாவோம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் டிராகி,
ஆனால் தற்போதைய சூழ்நிலை எந்த காரணத்தாலும் மிக மோசமான நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பதாலையே, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக பிரதமர் டிராகி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை புதிய மூன்றாவது தேசிய ஊரடங்கு அமுலில் இருக்கும்.