மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமாரவேல் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கிடையே தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.