நூற்றாண்டின் மிகப்பெரிய நேர்காணலாக கருதப்படும் ஓப்ரா வின்ஃப்ரேவின் நிகழ்ச்சிக்கு பிறக்கு பிரித்தானியா மக்களிடையே இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு கிடைத்திருந்த ஆதரவு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று நூற்றாண்டின் மிகப்பெரிய நேர்காணல் நிகழ்ச்சியாக கருதப்படும் இளவரசர் ஹரி- மேகன் தம்பதியுடனான ஓப்ரா வின்ஃப்ரேவின் கலந்துரையாடல் ஒளிபரப்பானது.
அதில் அவர்கள் பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக தாக்கிப்பேசிய நிலையில், பிரித்தானிய மக்களில் சரிபாதி பேர், இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு எதிரான கருத்தை பதிவு செய்துள்ளனர்.
இளவரசர் ஹரிக்கான மக்கள் ஆதரவு 15 புள்ளிகள் சரிவடைந்து தற்போது -3ல் எட்டியுள்ளது.
மேகன் மெர்க்கலின் மக்கள் ஆதரவு தற்போது -27ஐ எட்டியுள்ளது. குறித்த நேர்காணல் வெளியான பின்னர் சுமார் 1,664 பிரித்தானியர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றுள்ளனர்.
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ஹரி- மேகன் தம்பதிகளின் மக்கள் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரே ஒரு நேர்காணலில் மொத்த செல்வாக்கும் சரிவை சந்திந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
இருப்பினும் 18 முதல் 24 வயதுடைய பிரித்தானியர்களில் 55 சதவீதம் பேர் மேகன் மெர்க்கலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்களில் 85 சதவீதம் பேர் மேகன் மெர்க்கலை வெறுப்பதாக கூறுகின்றனர்.
பிரித்தானிய மக்களில் 5-ல் நான்கு பேர் ராணியாரை ஆதரிக்கின்றனர். இருப்பினும் 14 சதவீத மக்கள் ராணியாரின் நடவடிக்கைகளை விரும்புவதில்லை என தெரிவித்துள்ளனர்.