விக்ரம்-வேதா படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாதவன், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், ரெக்க படத்தை தயாரித்த காமன் மேன் பி.கணேஷ் தயாரிக்க உள்ளார். இப்படம் முழுக்கமுழுக்க காடுகளில் எடுக்கப்பட உள்ளது. இதற்காக தாய்லாந்து, மங்கோலியா, தஜகஸ்தான் காடுகளில் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். குழந்தைகள் ரசித்து பார்க்கும் வகையில் இப்படம் எடுக்கபப்பட உள்ளதாக சற்குணம் தெரிவித்துள்ளார்.