உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் அமெரிக்காவில் மட்டும் 14.5 மில்லியன் வரையானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி தற்போது ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் வரையானவர்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில் மிச்சிக்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வந்த நிலையில், இதன் விளைவாக நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட நெனோ தட்டுக்களை உருவாக்கியுள்ளனர்.
இதில் 10 நெனோ மீற்றர்கள் வரையான அளவுடைய இத் தட்டுக்கள் புற்றுநோய்க் கலங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் இத்தட்டுக்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் T வகைக் கலங்களுடன் இணைந்து புற்றுநோய்க் கலங்களை சென்றடைகின்றன.
இத் தட்டுக்கள் உடல் கலங்களுள் செலுத்தப்பட்டு 10 நாட்களில் புற்றுநோய்க் கலங்களை முற்றாக அழிக்கும் ஆற்றல் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.