தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அமமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், அமமுக-வின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 195 தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், தேமுதிக தனித்து தான் 2021 சட்டமன்ற தேர்தல் சந்திக்கும் என்றெல்லாம் தகவல்கள் பரவியது.
இந்நிலையில், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமமுக-தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் பெற்று கொண்டுள்ளார்.
மாலை 6.30 மணிக்கு கூட்டணி அறிவிப்புடன், தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாகவும், அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.