Loading...
பலருக்கும், தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அழகை எப்படி பெறுவது என்பது பற்றிய விஷயங்கள் தெரியாது.
இதற்காக க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்கள் முழுதும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது போல தோற்றமளித்தாலும் கூட, நாளடைவில் உங்களுக்கு வேறு சில பிரச்சனைகளை அளிக்கும் அல்லது சருமம் மேலும் கருப்பாகிவிடும்.
Loading...
இதுபோன்ற பிரச்சினைகள் வரமால் இருக்க வேண்டுமாயின் ஒரு சில இயற்கை முறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
- உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
- கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மாயமாகிவிடும்.
- செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.
- தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.
- நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
- அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
- தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
Loading...