இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும், யோ யோ டெஸ்ட்டில் சிறப்பாக செயல்படாத தமிழ வீரர் வருண்சக்ரவர்த்தி மற்றும் திவாதியா இருவரையும் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் விளாசியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில், இந்திய அணிக்கான வீரர்களின் பட்டியலில், தமிழக வீரரான வருண் சக்வர்த்தி மற்றும் திவாதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஏற்கனவே அவுஸ்திரேலியா தொடரில் தெரிவாகியிருந்தும், வருண் சக்ரவரத்தி காயம் காரணமாக அந்த தொடரில் விளையாட முடிவியவில்லை.
இப்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தும் வருண் சக்ரவர்த்தி யோ-யோ டெஸ்ட்டி தெரிவாகவில்லை.
இதே போன்று கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்த திவாதியாவும் இந்த யோ-யோ டெஸ்ட்டில் தெரிவாகவில்லை.
இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறுகையில், இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவதற்கான போதிய பிட்னஸ் தகுதி அவர்களிடத்தில் இல்லை. அதற்கு காரணம் சர்வதேச கிரிக்கெட் விளையாட அவர்களிடம் அர்ப்பணிப்பு என்பது அறவே இல்லை என்பதுதான். இதுவே அவர்களது கடைசி வாய்ப்பாக இருக்கலாம்.
இந்தியாவில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். வேலையோ, விளையாட்டோ எதுவாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். உங்களிடம் எதிர்பார்ப்பதை நீங்கள் சிறப்பாக செய்து காட்ட வேண்டும். இந்த வீரர்கள் இருவரும் தங்களது முதல் வாய்ப்பில்லையே அதை செய்ய தவறிவிட்டனர்.
மேலும் இதுவே அவர்களது கடைசி வாய்ப்பாக அமையலாம் என்று அவர்கள் இருவரையும் சாடியுள்ளார்.