தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த வருடக் கணக்கை தனது ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார்.
இந்நிலையில் ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு ‘கருப்பன்’ என படக்குழு பெயர் சூட்டியுள்ளது. விஜய் சேதுபதிக்கு நாயகியாக ரித்திகா சிங் நடிக்கவிருக்கிறார். மற்றொரு நாயகி வேடத்துக்கு லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 11-ம் தேதி தொடங்குகிறது. ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாபி சிம்ஹா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.